உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மக்களுடன் முதல்வர் திட்டம் 700க்கும் மேற்பட்டோர் மனு

மக்களுடன் முதல்வர் திட்டம் 700க்கும் மேற்பட்டோர் மனு

கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியில், 'மக்களுடன் முதல்வர்' திட்டம், நேற்று காலை 10:00 மணியளவில், கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள என்.பி.ஆர்., திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் எம்.பி., செல்வம், செங்கல்பட்டு எம்.எல்.ஏ., வரலட்சுமி பங்கேற்று துவக்கி வைத்தனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்று, மனுக்களை பெற்றனர்.இதில் சொத்து வரி, சொத்து வரி பெயர் மாற்றம், தொழில் வரி, கட்டட உரிமம் கோருதல், புதிய தொழில் உரிமம் பெறுதல், பிறப்பு பதிவு செய்தல், இறப்பு பதிவு செய்தல், சாலை வசதி, மழைநீர் வடிகால் அமைத்தல், குடிநீர் வசதி போன்றவைகள் தொடர்பாக மனு வழங்கப்பட்டது.மேலும், மின் இணைப்பு பெயர் மாற்றம் தொடர்பாக, மறைமலைநகர் தலைமை செயற்பொறியாளர் மனோகர் உள்ளிட்டோர் பயனாளிகளுக்கு பெயர் மாற்றம் செய்து உரிய சான்றிதழ் வழங்கினர். நேற்று நடைபெற்ற முகாமில், 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன்பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை