உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  மேலச்சேரி ரயில்வே சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

 மேலச்சேரி ரயில்வே சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

மறைமலை நகர்: செங்கல்பட்டு அருகே மேலச்சேரி கிராமத்தில், ரயில் தண்டவாளம் இடையே உள்ள சாலை கடுமையாக சேதமடைந்து உள்ளதால், சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பாலுார் ஊராட்சி மேலச்சேரி கிராமத்தில், செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலையை இணைக்கும் மேல்மணப்பாக்கம் சாலையை, சுற்றுப்பகுதி கிராம மக் கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில், செங்கல்பட்டு - - அரக்கோணம் செல்லும் ரயில் பாதை உள்ளது. சமீபத்தில், மேலச்சேரி ரயில் தண்டவாள சாலையில், ஜல்லி கற்கள் கொட்டி பராமரிப்பு பணிகள் நடைபெற்றன. இதன் காரணமாக தற்போது, சாலையை விட தண்டவாளம் உய ர்ந்து உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் தண்டவாளத்தை கடக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின் றனர். குறிப்பாக சைக்கிள், இருசக்கர வாகனங்களில் செல்வோர், சாலையைக் கடக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, மேலச்சேரி கிராமத்தில் ரயி ல் தண்டவாளம் இடையே உள்ள சாலையை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ