உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புதிதாக காவல் நிலைய கட்டடம் செங்கையில் ரூ.1.18 கோடியில் திறப்பு

புதிதாக காவல் நிலைய கட்டடம் செங்கையில் ரூ.1.18 கோடியில் திறப்பு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு கொள்வாய் ஏரி அருகில், பொதுப்பணி துறைக்கு சொந்தமான கட்டடத்தில் தாலுகா காவல் நிலையம் செயல்பட்டு வந்தது. இங்கு, இடநெருக்கடி மற்றும் விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால், போலீசார் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எனவே, தாலுகா காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, அப்பகுதியினர் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து, செங்கல்பட்டு -பொன்விளைந்தகளத்துார் சாலையில் அரசு மருத்துவ கல்லுாரி அருகே, 1 ஏக்கர் பரப்பளவில், 1 கோடியே 18 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 2022ல் புதிய கட்டடம் கட்டப்பட்டு, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்திடம்ஒப்படைக்கப்பட்டது.இந்த கட்டடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதைத், தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி., சாய் பிரணீத், செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மா, துணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்கிட் உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில், செங்கல்பட்டு தாலுகா இன்ஸ்பெக்டர், ஆலப்பாக்கம் ஊராட்சி தலைவர், வனக்குழு தலைவர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை