| ADDED : ஜன 01, 2026 05:06 AM
மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே மாநகர தாழ்தள பேருந்து விபத்துக்குள்ளானது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் இருந்து, புதிதாக பாடி கட்டப்பட்ட மாநகர தாழ்தள பேருந்து, சென்னை குரோம்பேட்டை பணிமனைக்கு நேற்று சென்றது. சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மதுராந்தகம் அருகேயுள்ள ஜானகிபுரம் பகுதியில், நேற்று காலை, 8:00 மணியளவில் சென்றபோது, திருவண்ணாமலையில் இருந்து சென்ற தனியார் பேருந்து, தாழ்தள பேருந்தின் பின்பக்கம் மோதியது. இதில் தாழ்தள பேருந்து, ஸ்டார்ட் ஆகாமல் மக்கர் செய்தது. இதனால், சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சென்ற மதுராந்தகம் போலீசார், போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தாழ்தள பேருந்தை சரி செய்யும் பணியில் போக்குவரத்து துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். -------------------