| ADDED : நவ 21, 2025 03:21 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகம், திறக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்ட தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகம் அமைத்து, அரசு உத்தரவிட்டது. இந்த அலுவலக கட்டுப்பாட்டில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் மற்றும் மாவட்ட வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட சென்னை பெருநகர மாநகராட்சி பகுதிகளை சார்ந்த தொழிலாளர்கள், வேலையளிப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த அலுவலகம், செங்கல்பட்டு குண்டூர் அண்ணா சாலை பி.எஸ்.என்.எல்., அலுவலக கட்டடத்தின் முதல் தளத்தில் அமைக்கப்பட்டது. அலுவலகத்தை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் அன்பரசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர். இதில், திறன் மேம்பாட்டுத்துறை அரசு செயலர் வீரராகவராவ், தொழிலாளர் ஆணையர் ராமன், கலெக்டர் சினேகா, சப் - கலெக்டர் மாலதி ெஹலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.