உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மழையால் பாதித்த பயிர்கள் அதிகாரிகள் கணக்கெடுப்பு

மழையால் பாதித்த பயிர்கள் அதிகாரிகள் கணக்கெடுப்பு

செய்யூர்:செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்திற்கு உட்பட்ட, லத்துார் மற்றும் சித்தாமூர் ஒன்றியத்தில் 84 ஊராட்சிகள் உள்ளன. இங்கு, 30,000 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலம் உள்ளது.ஏரி, ஆறு, குளம், கிணறு போன்ற நீராதாரங்கள் மூலமாக நெல், கரும்பு, எள், உளுந்து உள்ளிட்டவை பருவத்திற்கு ஏற்றாற்போல பயிரிடப்படுகிறது.தற்போது, செய்யூர் வட்டத்தில், 20,000 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிரும், 7,000 ஏக்கர் பரப்பளவில் மணிலாவும் பயிரிடப்பட்டு உள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக, அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மற்றும் புதிதாக பயிரிடப்பட்ட தர்ப்பூசணி, மணிலா மற்றும் உளுந்து பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கணக்கெடுப்பு நடந்து வரும் நிலையில், நேற்று செங்கல்பட்டு கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜேஷ்வரி, பவுஞ்சூர் வட்டார உதவி வேளாண் இயக்குனர் சுரேஷ்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் பெரும்பாக்கம், வீரபோகம், மடையம்பாக்கம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர்.இதில், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விபரம் சேகரிக்கவும், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இடுபொருட்கள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை