உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / லாரி மோதி முதியவர் பலி

லாரி மோதி முதியவர் பலி

மதுராந்தகம்:படாளம் அருகே கொலம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால், 60. இவர், நேற்று சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்,படாளம் கூட்டு சாலை சந்திப்பில், சாலையை கடப்பதற்காக நின்று கொண்டிருந்தார்.அப்போது, திண்டிவனம் மார்க்கத்திலிருந்து, படாளத்தில் உள்ள மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை ஏற்றுக் கொண்டு வந்த லாரி, ஆலைக்கு செல்வதற்காக திரும்பி யபோது, எதிர்பாராதவிதமாக, முதியவர் மீது மோதியது. அதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.சம்பவ இடத்திற்கு சென்ற படாளம் போலீசார், உடலை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு, உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.வழக்கு பதிவு செய்த போலீசார், விபத்து ஏற்படுத்தி விட்டு, தலைமறைவான லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்


 பட்டம்

18 hour(s) ago  




முக்கிய வீடியோ