உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  பகுதி நேர ரேஷன் கடை திறப்பு

 பகுதி நேர ரேஷன் கடை திறப்பு

திருப்போரூர்: நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, அருங்குன்றம் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டுள்ளது. திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய அருங்குன்றம் ஊராட்சியில், 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள், 3 கி.மீ., துாரத்தில், பெருமாள்கோவில் அருகே உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை பெற்று, தலையில் சுமந்து வந்தனர். குறிப்பாக, இருளர் பகுதி மக்கள் கூலி வேலைக்கு சென்று விடுவர். ரேஷன் கடை 3 கி.மீ., துாரத்தில் இருப்பதால், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், விடுப்பு எடுத்து பொருட்களை வாங்கி வந்தனர். இதனால், அருங்குன்றம் கிராமத்திலேயே பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதுகுறித்து, நம் நாளிதழிலில் செய்தி வெளியானது. இதையடுத்து, தனியார் கட்டடத்தில் பகுதி நேர ரேஷன் கடை செயல்பட ஏற்பாடுகள் நடந்தன. நேற்று பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டது. இதில், ஊராட்சி தலைவர் அன்பரசு, ரேஷன் கடையை திறந்து வைத்து, பொருட்கள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை