உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / முக்கிய சந்திப்பில் பொதுக்கூட்டம் மாமல்லபுரத்தில் நெரிசலால் அவதி

முக்கிய சந்திப்பில் பொதுக்கூட்டம் மாமல்லபுரத்தில் நெரிசலால் அவதி

மாமல்லபுரத்தில் குறுகிய சாலை சந்திப்பில் நடத்தப்படும் அரசியல் கட்சி பொதுக்கூட்டம், நிகழ்ச்சிகளால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர்.மாமல்லபுரம், ஜன. 4-மாமல்லபுரத்தில், கங்கைகொண்டான் மண்டபம் பகுதி, முக்கிய போக்குவரத்து சந்திப்பாக உள்ளது.கிழக்கு ராஜவீதி, திருக்கழுக்குன்றம் சாலை, கோவளம் சாலை, கங்கைகொண்டான் மண்டபம் தெரு ஆகியவை இங்கு இணைகின்றன. பிரதான வர்த்தக பகுதியாகவும் இது உள்ளது. உள்ளூர், சுற்றுலா வாகனங்கள் இச்சந்திப்பு வழியே, பல்வேறு பகுதிகளுக்குச் செல்கின்றன.இத்தகைய சந்திப்பில் அரசியல் கட்சியினர் அடிக்கடி பொதுக்கூட்டம், கண்டன ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவற்றை நடத்துகின்றனர். பிற அமைப்பினரும், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர்.இதற்காக, சாலை பகுதியை ஆக்கிரமித்தும், பேரூராட்சி அலுவலகத்தை மறைத்தும், மேடை அமைக்கின்றனர்.சாலை பகுதியில் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் திரண்டு, வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து தடைபடுகிறது. அவசர காலத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களும் செல்ல முடியவில்லை. அத்துடன், கூட்டத்தில் திரண்டுள்ளவர்கள் மீது வாகனம் மோதி, விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.காலை நேரத்தில் ஆர்ப்பாட்டம் நடக்கும் போது பேரூராட்சி ஊழியர்கள், அலுவலகம் உள்ளே செல்லவும், வெளியேறவும் கூட்டத்தில் சிக்கி சிரமப்படுகின்றனர்.இச்சந்திப்பு பகுதியில் பொதுக்கூட்டம், நிகழ்ச்சி நடத்த, பதாதைகள் வைக்க பேரூராட்சி மன்ற தீர்மானம் வாயிலாக, நிர்வாகம் தடை விதித்துள்ளது.ஆனால், மன்ற பிரதிநிதிகளாக உள்ள அரசியல் கட்சியினரே, போட்டிப்போட்டு பொதுக்கூட்டம் நடத்தி, தாங்கள் விதித்துள்ள தடையை, அவர்களே மீறுகின்றனர்.எனவே, இப்பகுதி போக்குவரத்து நெரிசல், மக்கள் நடமாட்டம் ஆகிய முக்கியத்துவம் கருதி, எத்தகைய கூட்டமும் நடத்தாமல் தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை