மேலும் செய்திகள்
அய்யனாரப்பன் கோவிலில் ஆடி திருவிழா
05-Aug-2025
மதுராந்தகம், மதுராந்தகம் அடுத்த கருங்குழியில் உள்ள, ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில் முப்பெரும் விழா நடந்தது. ஸ்ரீ ராகவேந்திரரின் 354ம் ஆண்டு ஆராதனை விழா, கருங்குழி பிருந்தாவனத்தின் 31ம் ஆண்டு விழா மற்றும் தவ யோகி ரகோத்தமா சுவாமிகளின் 12-வது ஆண்டு யோக பிரவேச விழா என முப்பெரும் விழா, கருங்குழியில் நேற்று நடந்தது. காலை 6:00 மணிக்கு கோ பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி நரசிம்மர் ஹோமம், ஆஞ்சநேயர் ஹோமம், ராகவேந்திரா சுவாமியின் மூலமந்திர ஹோமம் உள்ளிட்டவை நடந்தன. தொடர்ந்து ஆன்மிக சொற்பொழிவுகளும், ஆன்மிக பக்தி இன்னிசை கச்சேரியும் நடந்தன. பகல் 12:00 மணியளவில் ராகவேந்திரா சுவாமிக்கு, கருங்குழி பிருந்தாவன சித்தர் யோகி ரகோத்தமா மஹா தீபாராதனை காண்பித்தார். விழாவில், தொழில் துறை முன்னாள் அமைச்சர் சம்பத், முன்னாள் போலீஸ் ஏ.டி.எஸ்.பி., ராஜேந்திரன், மதுராந்தகம் காவல் துறை கண்காணிப்பாளர் மேகலா, கோவில் அறக்கட்டளை முதன்மை அறங்காவலர் ஏழுமலை தாசன் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, கருங்குழி பிருந்தாவன் சித்தர் யோகி ரகோத்தம அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
05-Aug-2025