உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கொட்டமேடு டாஸ்மாக் மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுகோள்

கொட்டமேடு டாஸ்மாக் மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுகோள்

திருப்போரூர்:கொட்டமேடு டாஸ்மாக் கடைக்கு வரும்,'குடி'மகன்கள், தங்களது வாகனங்களை தாறுமாறாக நிறுத்திவிட்டுச் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருப்போரூர் அடுத்த கொட்டமேடு கிராமத்தில், சாலையை ஒட்டி டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடைக்கு வருவோர், கொட்டமேடு- - கூடுவாஞ்சேரி சாலையில் இருசக்கர வாகனங்களை தாறுமாறாக நிறுத்திவிட்டு, மது வாங்கச் செல்கின்றனர். இதனால் சாலையில் பேருந்து, வேன், லாரி போன்ற கனரக வாகனங்கள் செல்ல முடியாமல், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடையை மையப்படுத்தி செயல்பட்டு வரும் சில கடைகளாலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகரிப்பதால், கடும் பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக, இரவு நேரத்தில் இந்த இடத்தில், சிறு விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. எனவே, இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை