உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  வல்லத்தில் நீர்த்தேக்க தொட்டி கட்ட ரூ.18 லட்சம் ஒதுக்கீடு

 வல்லத்தில் நீர்த்தேக்க தொட்டி கட்ட ரூ.18 லட்சம் ஒதுக்கீடு

செங்கல்பட்டு:வல்லம் ஊராட்சியில், புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியத்தில், வல்லம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தொட்டி பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இதை இடித்துவிட்டு, புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித் தரக்கோரி, தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமியிடம், பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன் பின், செங்கல்பட்டு எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், வல்லம் ஊராட்சியில் 30,000 கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட, 18 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்க, எம்.எல்,ஏ., வரலட்சுமி, கடந்த டிச., மாதம் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இப்பணியை செயல்படுத்த, காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு, கலெக்டர் சினேகா உத்தரவிட்டார். இப்பணிக்கு டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவங்கப்படும் என, வட்டார வளர்ச்சி அலுவலகம் தரப்பில் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை