உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  தொக்கீஸ்வரர் கோவில் குளம் கனமழையிலும் நிரம்பாததால் அதிர்ச்சி

 தொக்கீஸ்வரர் கோவில் குளம் கனமழையிலும் நிரம்பாததால் அதிர்ச்சி

வில்லியம்பாக்கம்: 'டிட்வா' புயல் காரணமாக தற்போது பெய்து வரும் கனமழைக்கு, வில்லியம்பாக்கம் தொக்கீஸ்வரர் கோவில் குளம் நிரம்பாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வில்லியம்பாக்கம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராம மக்கள் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கிராமத்தின் மையப்பகுதியில், பழமையான சொர்ணாம்பிகை சமேத தொக்கீஸ்வர் கோவில் அமைந்துள்ளது. கோவிலின் முன்பக்கத்தில், திருக்குளம் உள்ளது. 'டிட்வா' புயல் காரணமாக தற்போது பெய்து வரும் கனமழைக்கு, இந்த குளத்தில் சிறிதளவு தண்ணீரே தேங்கியுள்ளது. குளத்திற்கு மழைநீர் செல்லும் நீர்வரத்து கால்வாய்கள் துார்வாரப்படாததால், குளத்தில் நீர் தேங்கவில்லை என, கிராம மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். கனமழையால், இதே பகுதியில் வில்லியம்பாக்கம் -- சாஸ்திரம்பாக்கம் சாலையில் உள்ள நீஞ்சல்மடுவில், தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி பாலாற்றில் கலக்கிறது. ஆனால், கோவில் திருக்குளம் நிரம்பாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கன மழைக்கே இந்த குளம் நிரம்பாததால், கோடை காலங்களில் நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த குளம் மற்றும் குளத்திற்கு வரும் நீர்வழிப் பாதைகளை முறையாக துார்வாரி சீரமைக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை