| ADDED : நவ 21, 2025 03:14 AM
திருப்போரூர்: கோவளம் ஊராட்சியில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்வதற்கான சிறப்பு முகாம், நடந்தது. தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தபணிகள் நடைபெற்று வருகின்றன. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுதோறும்சென்று, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விண்ணப்ப படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கி, அவற்றை பூர்த்தி செய்து பெற்று வருகின்றனர். மேலும், சட்டசபை தொகுதி வாரியாகவும், சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், திருப்போரூர் சட்டசபை தொகுதியில் அடங்கிய கோவளம் ஊராட்சியில், வாக்காளர் சிறப்பு திருத்த விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்வதற்கான சிறப்பு முகாம் நேற்று நடந்தது. திருப்போரூர் சட்டசபைதொகுதி தேர்தல் பதிவாளர் பவானி, திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன், திருப்போரூர் தாசில்தார் சரவணன் ஆகியோர் முகாமை துவக்கி வைத்து, ஆலோசனை வழங்கினர்.