உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாநில மகளிர் போலீசார் துப்பாக்கி சுடும் போட்டி

மாநில மகளிர் போலீசார் துப்பாக்கி சுடும் போட்டி

சென்னை: மகளிர் காவலர்களுக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி, நாளை முதல் 20ம் தேதி வரை நடக்கிறது.காவல் துறை சார்பில் நடத்தப்படும் இந்த போட்டி, செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழக கமாண்டோ பள்ளி பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளது. 13 விதமான போட்டிகள், பல்வேறு பிரிவுகளில் நடக்கின்றன.காவல் துறை அமைப்புகள், மத்திய ஆயுதப்படைகளின் 30 அணிகளைச் சேர்ந்த எட்டு உயர் அதிகாரிகள் உட்பட, 454 மகளிர் காவலர்கள் பங்கேற்ற உள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில், அணி மேலாளர்கள் மற்றும் அலுவலர்கள் என, 176 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.ராஜரத்தினம் மைதானத்தில் நாளை, தமிழக காவல் துறை டி.ஜி.பி., சங்கர் ஜிவால், துப்பாக்கி சுடுதல் போட்டியை துவக்கி வைக்கிறார்.போட்டியில் வெற்றி பெறுவோருக்கு, 20ம் தேதி நடக்கும் நிறைவு விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பரிசுகளை வழங்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை