மேலும் செய்திகள்
சிதிலமடைந்த கழிப்பறை கீழக்கரணையில் அவதி
52 minutes ago
மலையடி வேண்பாக்கம் ஏரியை துார்வாரி சீரமைக்க வேண்டுகோள்
1 hour(s) ago
சேலையூர்: முதல் மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவிக்கு, முதுகில் எலும்பு முறிவு ஏற்பட்டது. கிழக்கு தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி மையத்தில் என்.சி.சி., முகாம் நடக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் 20 வயது மாணவி ஒருவர், கல்லுாரி குழுவுடன் நவ., 7ம் தேதி முகாமிற்கு வந்தார். பயிற்சி மையத்தில் உள்ள கட்டடத்தில் தங்கியிருந்தார். நவ., 13ம் தேதி இரவு 8:10 மணிக்கு, அறையின் முதல் மாடி ஓரத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக, தண்ணீரில் கால் வழுக்கி, முதல் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில், முதுகு பகுதி யில் எலும்பு முறிவு ஏற்பட் டது. அங்கிருந்தவர்கள் மாணவியை மீட்டு, தாம்பரத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து, சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
52 minutes ago
1 hour(s) ago