உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புறநகர் குற்றப்பிரிவு போலீசாருக்கு வாகன வசதி இல்லாததால் அவதி

புறநகர் குற்றப்பிரிவு போலீசாருக்கு வாகன வசதி இல்லாததால் அவதி

மறைமலை நகர்:கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், ஓட்டேரி காவல் நிலையங்கள், கடந்த 2022ம் ஆண்டு முதல், தாம்பரம் போலீஸ் கமிஷனரக கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன.இந்த காவல் நிலையங்களில், சட்டம் -- ஒழுங்கு, குற்றப்பிரிவு என, தனித்தனியாக இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டு, வழக்குகள் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன.இந்த காவல் நிலையங்களில், குற்றப்பிரிவுக்கு என தனியாக வாகன வசதி இல்லாததால், குற்றப் பிரிவு போலீசார் தவித்து வருகின்றனர்.வழக்கு தொடர்பாக, பல்வேறு பகுதிகளுக்கு விசாரணைக்கு செல்லும் போது, தனியாக வாடகை கார்களையே பயன்படுத்தி வருகின்றனர்.புறநகரில் முக்கிய பகுதிகளான சிங்கபெருமாள் கோவில், காட்டாங்கொளத்துார், பொத்தேரி, ஊரப்பாக்கம், வண்டலுார் உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும், இந்த காவல் நிலையங்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.இந்த பகுதிகளில், இரவு நேரங்களில் மொபைல் போன் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களும், அடிக்கடி நடைபெற்று வருகின்றன.தகவலறிந்து, போலீசார் வாடகை வாகனம் ஏற்பாடு செய்து செல்லும் நிலை உள்ளது. அல்லது சட்டம் -- ஒழுங்கு இன்ஸ்பெக்டர் வாகனம், காவல் நிலைய ரோந்து வாகனத்திற்காக காத்திருக்கும் நிலை உள்ளது.வாடகை கார்களில் செல்லும் போது, அதற்கான வாடகையை போலீசாரே செலுத்தும் நிலை உள்ளது. அதே போல, குற்றவாளிகளை செங்கல்பட்டு நீதிமன்றம் அழைத்து சென்று ஆஜர்படுத்தவும், வாடகை வாகனங்களையே பயன்படுத்தி வருகின்றனர்.எனவே, தாம்பரம் போலீஸ் கமிஷனரக கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து குற்றப்பிரிவு போலீசாருக்கும், தனியாக வாகனங்கள் வழங்க வேண்டும் என, போலீசார் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்