உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  தேசிய வளையப்பந்து போட்டியில் -தமிழக அணிகள் வரலாற்று சாதனை

 தேசிய வளையப்பந்து போட்டியில் -தமிழக அணிகள் வரலாற்று சாதனை

சென்னை: தேசிய ஜூனியர் வளையப்பந்து போட்டியில், தமிழக அணிகள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் 'சாம்பியன்' பட்டத்தை தக்க வைத்து, வரலாற்று சாதனை படைத்தது. ஜம்மு - காஷ்மீர் மாநில வளையப்பந்து கழகம் மற்றும் இந்திய வளையப்பந்து கூட்டமைப்பு இணைந்து, 42வது ஜூனியர் தேசிய வளையப்பந்து போட்டிகள், ஜம்முவில் கடந்த 26ம் தேதி துவங்கி 30ம் தேதி நிறைவடைந்தது. இப்போட்டியில், நாட்டின் 25 மாநிலங்களைச் சேர்ந்த 490 மாணவ - மாணவியர் பங்கேற்றுள்ளனர். ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் குழு ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. தமிழக மாணவர் அணி குழு போட்டியில் மஹாராஷ்டிரா அணியை எதிர்த்து விளையாடி, 2- - 3 என்ற செட் கணக்கில் வெள்ளிப் பதக்கத்தை வென்றது. தமிழக மாணவியர் அணி, 3 - 0 என்ற கணக்கில் புதுச்சேரி அணியை வீழ்த்தி தங்க பதக்கத்தை வென்றது. தனிநபர் ஒற்றையர் பிரிவில், தமிழக வீரர் தமிழ், 17 தங்கம்; செல்வவிகாஷ், 16 வெள்ளி பதக்கம் வென்றனர். மாணவியருக்கான பிரிவில் மணிமொழி, 17 தங்கம்; மகேஸ்வரி 17 வெள்ளி பதக்கமும் கைப்பற்றினர். தங்கம் வென்ற தமிழ் மற்றும் மணிமொழி ஆகியோர், இந்தாண்டின் சிறந்த வீரர் - வீராங்கனையராக தேர்வாகினர். மாணவர் இரட்டையர் பிரிவில், தமிழக அணியைச் சேர்ந்த அனுமுத்து, 17 - சஞ்சய் பிரசாத், 16 ஜோடி 2 - 0 என்ற செட் கணக்கில், புதுச்சேரி அணியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றனர். மாணவியர் இரட்டையர் பிரிவில் மேகலின் ஜெசிந்தா, 16 - தேவதர்ஷினி, 15 ஜோடி, கேரள அணியை எதிர்த்து விளையாடி, 1 - - 2 என்ற செட் கணக்கில் வெள்ளிப் பதக்கத்தை வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் சுதீப், 16 - மகாலட்சுமி, 16 ஜோடி, 2 - 0 என்ற கணக்கில் புதுச்சேரி அணியை எதிர்த்து விளையாடி வெண்கல பதக்கத்தை வென்றர். அனைத்து போட்டிகள் முடிவில், தமிழக அணி 34 புள்ளிகளுக்கு, 30 புள்ளிகள் பெற்று, ஐந்தாவது ஆண்டாக தொடர்ந்து, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து, வரலாற்று சாதனை படைத்தது. நேற்று காலை சென்னை வந்தடைந்த தமிழக அணியை, தமிழக வளையப்பந்து சங்க நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ