செங்கழநீர் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த தண்டலம் ஊராட்சியில் பழமையான செங்கழநீர் விநாயகர் கோவில் அமைந்துள்ளது.ஆண்டுதோறும் இக்கோவிலில் திருப்பணிகள் முடித்து கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.திருப்பணிகள் முடிந்து நேற்று யாகசாலை பூஜை, கலச புறப்பாடுடன் கும்பாபிஷேக விழா நடந்தது.சிறப்பு கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து வேல்வி பூஜைகள் நடந்தன.கலசகுடங்களுடன் புறப்பாடு காலை 9:00 மணிக்கு துவங்கியது. 10:00 மணி அளவில் விமானத்திற்கு சிவாச்சாரியார்கள் கலசநீர் ஊற்றி அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. இதில், தண்டலம் மற்றும் அதை சுற்றியுள்ள பக்தர்கள் பங்கேற்றனர்.