உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தாழ்வழுத்த பிரச்னைக்கு தீர்வு புதிய மின்மாற்றி பொருத்தம்

தாழ்வழுத்த பிரச்னைக்கு தீர்வு புதிய மின்மாற்றி பொருத்தம்

கூடுவாஞ்சேரி:நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, கூடுவாஞ்சேரி எட்டாவது வார்டுக்கு உட்பட்ட, கணபதி நகர் பகுதியில், 350க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதிக்கு, கணபதி நகரில் உள்ள மின்மாற்றி மூலம் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சில நாட்களாக, தாழ் வழுத்த மின் வினியோகத்தால், இப்பகுதிவாசிகள் மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட மின் சாதனங்களை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.இதுகுறித்து, எட்டாவது வார்டு தி.மு.க., கவுன்சிலர்குமரவேல், கூடுவாஞ்சேரி மின்வாரிய உதவி செயற்பொறியாளரிடம் புகார் மனு அளித்தார்.அதன்படி, கூடுவாஞ்சேரி மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, பழுதடைந்த மின்மாற்றியை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்கப்பட்டது. தற்போது, பகுதி வாசிகளுக்கு சீரான மின் வினியோகம் வினியோகிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை