உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இளைஞர் பலி

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இளைஞர் பலி

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த அருங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன்குமார், 29. நேற்று இரவு, வழக்கம் போல், தன் கூரை வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார்.அப்போது, இரண்டு நாள் பெய்த மழையின் காரணமாக, ஊறிப்போயிருந்த கூரை வீட்டின் சுவர், நேற்று இரவு இடிந்து, உறங்கிக் கொண்டிருந்த பிரவீன்குமார் மீது விழுந்தது.அதில், பலத்த காயம் ஏற்பட்டு கிடந்த அவரை, உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி, பிரவீன்குமார் உயிரிழந்தார். இது குறித்து, மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை