| ADDED : பிப் 16, 2024 12:13 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில், வரும் லோக்சபா தேர்தலில், மாற்றுத்திறனாளிகள் ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம் ஓட்டு அளிப்பதற்கான விழிப்புணர்வு பயிற்சியை, கலெக்டர் அருண்ராஜ் நேற்று துவக்கி வைத்தார்.இதில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி, தேர்தல் பிரிவு தாசில்தார் சிவங்கரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.கலெக்டர் அலுவலகம் வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு, ஓட்டு அளிப்பது குறித்த பயிற்சியை அளிக்க, ஒரு ஊழியர் நியமிக்கப்பட்டுள்ளார்.இதேபோல், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகா அலுவலகங்களிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம் ஓட்டு அளிக்க, ஊழியர்கள் பயிற்சி அளித்தனர்.