உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  கோவிலுக்கு செல்லும் பாதையில் கழிவுநீர் வழிந்தோடுவதால் அவதி

 கோவிலுக்கு செல்லும் பாதையில் கழிவுநீர் வழிந்தோடுவதால் அவதி

சிங்கபெருமாள் கோவில்: சிங்கபெருமாள் கோவில் சாலையில் கழிவுநீர் வழிந்தோடுவதால், அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில், ஆயிரக்கணக்கான வீடுகள், நுாற்றுக்கும் மேற்பட்ட வணிக கட்டடங்கள், வங்கிகள் உள்ளிட்டவை உள்ளன. சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தங்களின் அடிப்படை தேவைகளுக்கு, தினமும் சிங்கபெருமாள் கோவில் பகுதிக்கு வந்து செல்கின்றனர். இங்கு அனுமந்தபுரம் சாலையில் பழமையான பாடலாத்ரி நரசி ம்ம பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து, பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலுக்குச் செல்லும் வழியான அனுமந்தபுரம் ஜி.எஸ்.டி., சாலை சந்திப்பில், கழிவுநீர் வழிந்து ஓடுகிறது. இதன் காரணமாக, அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: கோவிலுக்குச் செல்லும் பக்தர் கள், பள்ளி செல்லும் குழந்தைகள் இந்த பகுதியை கடந்து செல் லும் போது, கழிவுநீரில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் செல்லும் போது, பாதசாரிகள் மீது கழிவுநீர் பட்டு பாதிக்கப்படுகின்றனர் . தொடர்ந்து கழிவுநீர் தேங்குவதால், இந்த பகுதியில் கொ சுத்தொல்லை அதிகரித்து உள்ளது. இந்த பிரச்னையை ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்வதில்லை. எனவே, கழிவுநீர் பிரச்னைக்கு உரிய தீர்வு காண, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி