உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கல்லுாரி மாணவன் ஓட்டிய ஜீப் மோதி இருவர் படுகாயம்

கல்லுாரி மாணவன் ஓட்டிய ஜீப் மோதி இருவர் படுகாயம்

மயிலாப்பூர், : சென்னை, மெரினா கடற்கரையில் இருந்து நுங்கம்பாக்கம் நோக்கி, நேற்று முன்தினம் இரவு சொகுசு ஜீப் ஒன்று அதிவேகமாக வந்தது.மயிலாப்பூர், ஆர்.கே.சாலை, வி.எம்.தெரு சந்திப்பில் வரும்போது, சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதி, சில அடி துாரத்திற்கு இழுத்துச் சென்றது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் படுகாயமடைந்தனர்.போக்குவரத்து போலீசார், இருவரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரின் விசாரணையில், படுகாயமடைந்தவர்கள், மயிலாப்பூரைச் சேர்ந்த அஜய், 19, நிதிஷ், 19, இருவரும் கல்லுாரி மாணவர்கள் என தெரிந்தது.விபத்து ஏற்படுத்தியது, மேடவாக்கம், சந்தோஷ்புரத்தைச் சேர்ந்த கல்லுாரி மாணவன் என்பதும், நண்பர்களுடன் அதிவேகமாக வாகனத்தை ஓட்டியதும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை