உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆந்திரா தொழிலாளர் இருவர் மின்சாரம் பாய்ந்து பலி

ஆந்திரா தொழிலாளர் இருவர் மின்சாரம் பாய்ந்து பலி

மேல்மருவத்துார்: ஆந்திர மாநிலம், கோட்டை மாவட்டம், வீரராகவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தாராவ், 49. சந்தபொம்மலுார் பகுதியைச் சேர்ந்தவர் ரமணா, 62. இவர்கள் கடந்த சில நாட்களாக, மேல்மருவத்துார் - வந்தவாசி செல்லும் சாலையோரம் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு, கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். நேற்று காலை 10:00 மணியளவில் பணியில் இருந்த போது, மண்டபத்தின் எதிரே செல்லும் மின்கம்பியில், எதிர் பாராத விதமாக இரும்பு 'ஆங்கிள்' கம்பி உரசி உள்ளது. இதிலிருந்து மின்சாரம் பாய்ந்து, இருவரும் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளனர். இருவரையும் அங்கிருந்தோர் மீட்டு, மேல்மருவத்துார் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, மேல்மருவத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை