உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  பாதாள சாக்கடை திட்ட பணி எச்சரிக்கை பலகை அவசியம்

 பாதாள சாக்கடை திட்ட பணி எச்சரிக்கை பலகை அவசியம்

செங்கல்பட்டு: பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெறும் பகுதிகளில், எச்சரிக்கை பலகை வைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு நகராட்சியில் ஜே.சி.கே., நகர், நத்தம், மேட்டுத்தெரு, வேதாசலம் நகர், அனுமந்தபுத்தேரி அழகேசன் நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது. சாலையின் மையப்பகுதிகளில் குழாயை இணைக்கும் தொட்டிகள் அமைக்க, பள்ளங்கள் தோண்டப்படுகின்றன. அதன் பின், பள்ளங்களில் தொட்டிகள் அமைக்கப்பட்ட பின், சாலையை முழுமையாக சீரமைக்காததால், ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளன. இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளங்களில் ஏறி இறங்கும் போது, விபத்துகளில் சிக்குகின்றனர். இதுமட்டுமின்றி, பணிகள் துவங்கி நடைபெறும் பகுதியில், அதுகுறித்த எச்சரிக்கை பலகை இல்லாததால், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க, பணிகள் நடைபெறும் பகுதியில் எச்சரிக்கை பலகைகள் பெரிய அளவில் வைக்க வேண்டும். அத்துடன், பணிகள் நடைபெறும் பகுதிகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில், எச்சரிக்கை பலகை முன்கூட்டியே வைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை