மேலும் செய்திகள்
பகலில் தொடர்ந்து எரியும் விளக்குகளால் மின் இழப்பு
3 minutes ago
கொடூர் சாலையை சீரமைக்க வேண்டும்
3 minutes ago
கஞ்சா வைத்திருந்த இருவர் கைது
4 minutes ago
குட்கா விற்ற வாலிபர் கைது
5 minutes ago
வண்டலுார்: வண்டலுாரில், பராமரிப்பின்றி சீரழிந்துள்ள பூங்காவை சீரமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வண்டலுார் ஊராட்சி, ஓட்டேரி விரிவு, 13வது வார்டுக்கு உட்பட்ட வால்மீகி தெருவில், 22 சென்ட் பரப்பில் பாரதி திடல் பூங்கா உள்ளது. சிறுவர்கள் மற்றும் பெண்களின் பொழுதுபோக்கு இடமாக இருந்த இந்த பூங்கா, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பின்றி, மாடுகளின் மேய்ச்சல் நிலமாக மாறி உள்ளது. இந்த பூங்காவை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, இப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்து உள்ளனர். ஆனால், ஊராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், பூங்காவிற்கு வருவோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். எனவே, ஊராட்சி நிர்வாகத்தினர் ஆய்வு செய்து, இந்த பூங்காவை சீரமைத்து, குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 minutes ago
3 minutes ago
4 minutes ago
5 minutes ago