உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அம்மா உணவகம் அமையுமா?

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அம்மா உணவகம் அமையுமா?

கூடுவாஞ்சேரி:கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில், இரண்டு பெரிய உணவகங்கள் மட்டுமே செயல்படுகின்றன. அவற்றிலும், உணவுப் பொருட்களின் விலை, சாமானிய மக்கள் வாங்கி சாப்பிட முடியாத அளவிற்கு உள்ளது.அடிப்படை வசதிகளான குடிநீர் உள்ளிட்டவையும் பற்றாக்குறையாக உள்ளது என, தென்மாவட்ட பயணியர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.இது குறித்து, தென்மாவட்ட பயணி ஒருவர் கூறியதாவது:நான் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவன். தியாகராய நகரில் உள்ள ஒரு ஜவுளி கடையில் பணிபுரிந்து வருகிறேன். சொந்த ஊருக்கு செல்வதற்காக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்தேன்.இங்கு, விலை குறைந்த உணவகங்களே இல்லை. எனவே, தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இங்கு, அம்மா உணவகம் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை