| ADDED : பிப் 25, 2024 01:40 AM
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அடுத்த பாபுராயன்பேட்டையில் உள்ள எஸ்.ஆர்.எம்., வேளாண் அறிவியல் கல்லுாரி மாணவியர், நேற்று அச்சிறுபாக்கம் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில், உலக பருப்பு தின கண்காட்சியை நடத்தினர்.இதில், அச்சிறுபாக்கம் வேளாண் அலுவலர் அருள்பிரகாசம், வேளாண் கல்லுாரி முதல்வர் ஜவஹர்லால் மற்றும் பேராசிரியர்கள் ராஜசேகரன், நவீன் குமார், ஸ்ரேயாஸ் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.இதில், உலக பருப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும், ஒரு கொள்கையோடு கொண்டாடப்பட்டு வருகிறது.அதன்படி, 'மண்ணிற்கும் மக்களுக்கும் ஊட்டமளிக்கும் பருப்புகள்' என்ற தலைப்பில், நடப்பாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.இதையொட்டி, மண்வளத்தை அதிகரிப்பதில் பருப்புகள் வகிக்கும் பங்கு, பருப்பு உற்பத்தியில் முன்னணி வகிக்கும் மாநிலங்கள், பருப்பு வகைகள், பருப்பில் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் பருப்புகளின் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு, இளங்கலை நான்காம் ஆண்டு பயிலும் மாணவியர் எடுத்துரைத்தனர்.