உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  பைக்குகள் மோதி விபத்து வாலிபர் உயிரிழப்பு

 பைக்குகள் மோதி விபத்து வாலிபர் உயிரிழப்பு

சித்தாமூர்: நல்லாமூர் கிராமத்தில், வேகமாகச் சென்ற இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலியானார். சித்தாமூர் அடுத்த காட்டுதேவாத்துார் கிராமம், செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ், 20; தனியார் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு பி.சி.ஏ., படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில், உறவினரான யோகேஷ், 17, என்பவரை, தன் 'யமஹா' பைக்கில் ஏற்றிக் கொண்டு, சித்தாமூர் சென்றார். கீழ்கரணை கிராமத்தில் சென்ற போது, எதிரே வேகமாக வந்த மற்றொரு 'யமஹா' பைக், நேருக்கு நேர் மோதியது. இதில், விக்னேஷுக்கு வலது கையில் முறிவு ஏற்பட்டது. யோகேஷுக்கு இடது காலில் முறிவு மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தோர், இவர்கள் இருவரையும் மீட்டு, ஆம்புலன்சில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதில், யோகேஷுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை 9:00 மணியளவில், சிகிச்சை பலனின்றி யோகேஷ் உயிரிழந்தார். இதுகுறித்து, சித்தாமூர் போலீசார் வழக்கு பதிந்து, விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை