உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 10 ரூபாய் இயக்கத்தினர் கைது

10 ரூபாய் இயக்கத்தினர் கைது

திருவல்லிக்கேணி, தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற பத்து ரூபாய் இயக்கத்தினரை, விருந்தினர் மாளிகை அருகே போலீசார் கைது செய்தனர்.பத்து ரூபாய் இயக்கத்தின் வழக்கறிஞரும், பொதுச்செயலருமான விஸ்வராஜு என்பவர் தலைமையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தை பாதுகாக்கக் கோரியும், தகவல் ஆணைய முறைகேடுகளை கண்டித்தும் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.இதற்காக தலைமை செயலகத்தை முற்றுகையிட சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே, 70க்கும் மேற்பட்டோர் நேற்று காலை திரண்டனர்.இதை அறிந்த திருவல்லிக்கேணி போலீசார், விருந்தினர் மாளிகையில் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை