மேலும் செய்திகள்
சாலை மைய தடுப்பில் பைக் மோதி மாணவர் பலி
05-Oct-2025
வீல் சேர் குண்டு எறிதல்: சென்னைக்கு வெள்ளி
05-Oct-2025
மாநில தடகளம்: சென்னை வீரர் அசத்தல்
05-Oct-2025
'மிடாஸ் டச்' நிறுவனம் சார்பில், பிரமாண்ட தொழிற்சாலைகளுக்கு தேவையான பாதுகாப்பு, பொருட்களை கையாளும் உபகரணங்கள், பொருட்களுக்கான பேக்கேஜ் மற்றும் ஆட்டோமேஷன் ரோபோட்டிக்ஸ் இயந்திரங்கள் குறித்த, மூன்று நாள் கண்காட்சி, சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று துவங்கியது.துவக்க விழாவில், பிளாஸ்டிக் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் மண்டல இயக்குனர் ரூபன் ஹாப்டே சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கண்காட்சியை துவக்கி வைத்து பேசினார். கண்காட்சி குறித்து, 'மிடாஸ் டச்' இயக்குனர் விவேகானந்தன் கூறியதாவது:இந்த கண்காட்சி, மூன்றாவது முறையாக நடத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களின், 'வேர்ஹவுஸ்'க்கு தேவையான இழுவை, பளுதுாக்கி உள்ளிட்ட இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. அதேபோல, சரக்கு கையாள்வதும் அவசியப்படுகிறது.மேலும், 'ஆட்டோமேஷன், ரோபோட்டிக்ஸ்' மிக மிக தேவையாகிறது. இவை தேவைப்படும் நிறுவனங்களுக்கும், இதுபோன்ற இயந்திரங்கள், பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் பாலமாக, இந்த கண்காட்சி திகழ்கிறது.வரும் ஆக., மாதம், கோவையில் பிளாஸ்டிக் பொருட்களுடன் சேர்த்து, கண்காட்சி நடத்தப்படவுள்ளது. கடந்த முறை நடந்த கண்காட்சியில், 37,000 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது. இம்முறை, 150க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. 10,000 பார்வையாளர்களையும், 50,000 கோடி ரூபாய்க்கான வர்த்தகத்தையும் எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.கண்காட்சியில் இன்று 10 தொழில் சம்பந்தப்பட்ட கருத்தரங்கங்கள் நடத்தப்படுகின்றன.
சென்னை, அயப்பாக்கத்தில் இயங்கி வரும் சாய் வெல்டிங் மற்றும் கட்டிங் நிறுவன அரங்கில் வைக்கப்பட்டுள்ள ரோபாட்டிக் வெல்டிங் இயந்திரம், பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.நவீன தொழில்நுட்ப முறையில் மிகவும் நுணுக்கமான முறையில் புரோகிராம் செய்தால் அதற்கேற்ப மிக துல்லியமாக வெல்டிங் செய்கிறது. இது, இரண்டு ரகங்களில் கிடைக்கிறது. இந்த மிஷின்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இவற்றின் விலை முறையே, 18.5 லட்சம் ரூபாய் மற்றும் 26 லட்சம் ரூபாய் என்கிறார், நிறுவன மேலாண் இயக்குனர் அருண்சாய்ராம்.
'சேப்டி பார் ஆல் நிறுவனர்' ஹுசைன் வாஜி: எங்கள் நிறுவனத்தில் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேவைப்படும் அனைத்து பாதுகாப்பு கருவிகளும் உள்ளன. இந்த பாதுகாப்பு கருவிகளில் தரம் மிகவும் முக்கியம் என்பதால், பெரும்பாலான பொருட்களை நாங்களே தயாரிக்கிறோம். எங்களிடம், 5,000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு கருவிகள் உள்ளன.
'மெசாட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்' நிறுவன மேலாண் இயக்குனர் வில்சன்:தொழில்சாலைகளில் உள்ள மெட்டீரியல்களை கையாளும் உபகரணங்கள் அனைத்தையும், எங்கள் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. இதில், கன்வேயர், பேலட் டிரக், பிளாட்பார் டிரக், எலக்ட்ரிக் டவ் டிரக், மேனுவல் ஸ்டாக்கர், எலக்ட்ரிக் ஸ்டாக்கர் உள்ளிட்ட பல தயாரிப்புகள் உள்ளன. எடை துாக்கும் திறன் பொறுத்து, அதன் விலை மாறுபடும். குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாயில் இருந்த 15 லட்சம் ரூபாய் வரை கருவிகள் உள்ளன.
'கோர்டக்ஸ் பேக்' பி.லிமிடெட்., மேலாண் இயக்குனர் ஹரிஷ்: தொழிற்சாலைகளில் எந்த ஒரு பொருள் தயாரித்தாலும், அவற்றை உற்பத்தி செய்த இடத்தில் இருந்து விற்பனை செய்ய வேண்டிய இடத்திற்கு பாதுகாப்புடன் கொண்டு செல்வது அவசியம். அந்த பாதுகாப்பை எங்கள் நிறுவன உபகரணங்கள் உறுதி செய்கின்றன. அதற்கான ஏர்பேக், வோவன் ஸ்ட்ராப், கார்டர் ஸ்ட்ராப், பாலி எத்திலின் பிலிம், டெசிகன்ட், கார்கோ பேக், நெட் உள்ளிட்டவற்றை தயாரித்து விற்பனை செய்கிறோம்.
பொருட்களுக்கான அனைத்து வகை, அளவுகளில், ஒரு நிமிடத்தில், 60க்கும் மேற்பட்ட பேக்கிங் செய்யும் திறன் உடைய நவீன இயந்திரங்களை, தயாரித்து விற்பனை செய்கிறோம். இது இல்லாமல் ரோஸ்டிங், பில்லிங், பல்வரைசிங், சிலைசர் உள்ளிட்ட, 2,000த்துக்கும் மேற்பட்ட இயந்திரங்களை தயாரித்து விற்பனை செய்கிறோம்.குறைந்தபட்சம், 18,000 ரூபாயில் இருந்து, 22 லட்சம் ரூபாய் வரை இயந்திரங்கள் உள்ளன. இவற்றில், 'ஆட்டோமேட்டிக்' இயந்திரங்களை நாங்களே தயாரிக்கிறோம். சிறிய ரக இயந்திரங்கள் மட்டும் தைவானில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.-- நமது நிருபர் --
05-Oct-2025
05-Oct-2025
05-Oct-2025