| ADDED : ஜூலை 10, 2024 01:34 AM
சென்னை:கலை பண்பாட்டுத் துறை சார்பில், ஓவியம் மற்றும் சிற்பக் கலையில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்கப்படுத்த, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த,'ஓவிய சந்தை' திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.அதன்படி, சென்னை மற்றும் கோவையில், ஓவிய சந்தை நடத்தி, அதில் கலைஞர்களின் ஓவியம் மற்றும் சிற்ப கலைப் படைப்புகளை காட்சிப்படுத்தி விற்க, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில், ஆக., 2 முதல் 4ம் தேதி வரை, ஓவிய சந்தை நடக்க உள்ளது. இதன் வழியே தமிழகத்தைச் சேர்ந்த ஓவிய, சிற்பக் கலைஞர்கள் பயன்பெறலாம்.அவர்கள் விற்க திட்டமிட்டுள்ள கலைப்படைப்புகளின் விபரம், அவற்றின் புகைப்படங்கள், கலை படைப்புகளின் விற்பனைத் தொகை ஆகிய விபரங்களுடன் கூடிய விண்ணப்பத்தை, வரும் 23ம் தேதிக்குள், முதல்வர், அரசு கவின் கலைக் கல்லுாரி, ஈ.வெ.ரா.பெரியார் சாலை, சென்னை - 600 003 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.விண்ணப்பத்தை www.artandculture.tn.gov.inஎன்ற கலை பண்பாட்டுத்துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.