உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முதல்வர் கோப்பை போட்டி பதிவு செய்ய 25ம் தேதி கடைசி

முதல்வர் கோப்பை போட்டி பதிவு செய்ய 25ம் தேதி கடைசி

சென்னை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 2024 - 25ம் ஆண்டிற்கான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள், வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடக்க உள்ளன.பள்ளி, கல்லுாரி, அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுப்பிரிவு என, ஐந்து பிரிவுகளில் 27 விளையாட்டுகளில், 53 வகையிலான மாவட்ட, மண்டலம் மற்றும் மாநில போட்டிகள் நடத்தப்படுகின்றன.பள்ளி கல்லுாரி பிரிவில், கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுபந்து, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகள் நடக்கின்றன. அதேபோல், பொதுபிரிவு, அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவுகளில் தனித்தனியாக போட்டிகள் நடக்கின்றன. போட்டியில் பங்கேற்க விரும்புவோர், www.sdat.tn.gov.inஅல்லது https://sdat.tn.gov.inஎன்ற இணையதளத்தில், வரும் 25ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு நலன் அலுவலர் அல்லது 74017 03480 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ