உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 28 டன் ஆட்டோ மொபைல் உதிரிபாகம் திருடியோர் கைது

28 டன் ஆட்டோ மொபைல் உதிரிபாகம் திருடியோர் கைது

மதுரவாயல், மதுரவாயல் ஆலப்பாக்கம், அஷ்டலட்சுமி நகரைச் சேர்ந்தவர் உதயகுமார், 32. வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் நிறுவன மேலாளர்.சில நாட்களுக்கு முன், நிறுவனத்தின் கிடங்கில் சோதனை செய்தபோது, 28 டன் இரும்பு உதிரிபாகங்கள், 1.7 டன் செம்பு உதிரிபாகங்கள் திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்படி விசாரித்த போலீசார், திருட்டில் ஈடுபட்ட ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தைச் சேர்ந்த கிடங்கு பொறுப்பாளர் விமல்குமார், 40, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஓட்டுனர் சதிஷ்குமார், 27, ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர். விசாரணையில், மேற்கண்ட இருவரும் சிறிது சிறிதாக உதிரிபாகங்களை திருடியது தெரிந்தது.இவர்களிடம் இருந்து, 1,044 கிலோ உதிரிபாகங்கள், 50,000 ரூபாய், லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புள்ள, மணிகண்டன் என்பவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை