உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண் உட்பட 3 பேர் கஞ்சா வழக்கில் கைது

பெண் உட்பட 3 பேர் கஞ்சா வழக்கில் கைது

நீலாங்கரை, இ.சி.ஆர்., நீலாங்கரையில் போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது, சந்தேகத்தின்படி மூன்று பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, 3 கிலோ கஞ்சா சிக்கியது.விசாரணையில், பாலவாக்கத்தைச் சேர்ந்த கலையரசன், 32, அவரது தோழி கண்ணகிநகரைச் சேர்ந்த லட்சுமி, 30, மற்றும் 18 வயது நபர் என தெரிந்தது. போலீசார் மூன்று பேரையும் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.போலீசார் கூறியதாவது:மூன்று பேரும் ஒடிசா மாநிலம் சென்று, கஞ்சா கடத்தி வந்து சென்னையில் சில்லரை விற்பனை செய்வது தெரிந்தது. பயணத்தின்போது போலீசாரிடம் சிக்காமல் இருக்க, கலையரசன், லட்சுமியை மனைவி என்றும், 18 வயதுள்ள நபரை லட்சுமியின் சகோதரர் என, அழைத்துச் சென்று வந்துள்ளார். இவர்களுடன் தொடர்புடைய நபர்களை தேடி வருகிறோம்.இவ்வாறு போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை