உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 4 மின்சார ரயில்கள் எளாவூர் வரை நீட்டிப்பு

4 மின்சார ரயில்கள் எளாவூர் வரை நீட்டிப்பு

சென்னை, சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டம்,எளாவூரில் வரும் 5 முதல் 7ம் தேதி வரை 'பைபிள் மாநாடு' நடக்க உள்ளது. இதில் பங்கேற்கும் பயணியரின் வசதிக்காக, கும்மிடிப்பூண்டி வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள், மேற்கண்ட நாட்களில் எளாவூர் வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளது. சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி காலை 9:00, மாலை 3:05 மணி ரயில்கள், மேற்கண்ட நாட்களில் எளாவூர் வரை நீட்டித்து இயக்கப்படுகிறது கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை காலை 10:45 மணி ரயில், எளாவூரில் இருந்து இயக்கப்படும்  கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல் மாலை 4:45 மணி ரயில், எளாவூரில் இருந்து இயக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ