உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கொசு உற்பத்தி ரூ.50,000 அபராதம்

கொசு உற்பத்தி ரூ.50,000 அபராதம்

சோழிங்கநல்லுார், கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் வளாகத்தை வைத்திருந்த தனியார் நிறுவனத்திற்கு, சுகாதாரத்துறை அதிகாரிகள், 50,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.சோழிங்கநல்லுார் மண்டலம், 198வது வார்டு, காரப்பாக்கம், கங்கையம்மன் கோவில் தெருவில், ஒரு தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு தேங்கிய நீரில், டெங்கு பரப்பும் கொசுப்புழுக்கள் அதிகமாக உற்பத்தியாகி இருந்தன.மாநகராட்சியின் சுகாதாரத்துறை பலமுறை எச்சரிக்கை விடுத்தும், தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ச்சியாக, கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் வளாகத்தை வைத்திருந்ததால், சுகாதாரத்துறை அதிகாரிகள், அந்நிறுவனத்திற்கு 50,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை