உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.60 லட்சம் தங்கம் பறிமுதல்

ரூ.60 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை, துபாய் விமானத்தில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்திவரப்படுவதாக, விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் மற்ற நாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களை கண்காணித்து வந்தனர். அப்போது, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்றான துபாயில் இருந்து விமானம் ஒன்று வந்தது. அதில் வந்திருந்த பயணியரை சோதனை செய்தனர். அதில், ஆண் பயணி ஒருவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. அவரை தனி அறைக்கு அழைத்து சென்று விசாரித்ததில், உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்தி வந்தது உறுதியானது. அதன் எடை 950 கிராம் அதன் மதிப்பு 60 லட்சம் ரூபாய். கடத்தலில் ஈடுபட்ட பயணியை கைது செய்து, சுங்கத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ