உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குரோம்பேட்டை எம்.ஐ.டி.,யின் 75ம் ஆண்டு விழா நிறைவு

குரோம்பேட்டை எம்.ஐ.டி.,யின் 75ம் ஆண்டு விழா நிறைவு

குரோம்பேட்டை:குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி., கல்லுாரியின் 75ம் ஆண்டு விழா, கடந்தாண்டு ஜூலை துவங்கி, பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டு வந்தது.நிறைவு நாளான நேற்று, நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் பொன்முடி பங்கேற்று பேசியதாவது:.எம்.ஐ.டி., கல்லுாரி, 1949ல் ராஜம் என்பவரால் துவங்கப்பட்டு, 75ம் ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது என்றால், சாதாரண விஷயம் இல்லை. இக்கல்லுாரியில் படித்தவர்கள், அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர்.இக்கல்லுாரிக்கு, பல்வேறு காலக்கட்டங்களில், பிரதமர்கள் முதல் முதல்வர்கள் வரை வந்து சென்றுள்ளனர்.இக்கல்லுாரியில், முன்னாள் மாணவர்களின் நினைவாக, ஒரு கட்டடம் கட்டப்பட வேண்டும். கல்லுாரியின் வளர்ச்சிக்கு, முன்னாள் மாணவர்கள் காரணமாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை