உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ேஹாட்டலில் தீ விபத்து

ேஹாட்டலில் தீ விபத்து

வடபழனி, வடபழனி ஆற்காடு சாலையில், வணிக வளாகத்தின் மூன்றாவது மாடியில் கடந்த 11 ஆண்டுகளாக பார்வதி, 64, என்பவர் 'அம்மாச்சி குழம்பு கடை' என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.நேற்று காலை 6:30 மணியளவில், சமையல் அறையில் வேலை செய்யும் சரவணன் என்பவர் 'காஸ்' அடுப்பை பற்றவைத்தார். அப்போது, சிலிண்டரில் திடீரென தீ பிடித்தது.அருகில் இருந்த குளிர்சாதன பெட்டியிலும் தீ பரவியது. இதில், குளிர்சாதன பெட்டி மற்றும் குக்கர் வெடித்தன.அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. தகவல் அறிந்து வந்த அசோக் நகர் மற்றும் கோயம்பேடு தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.வடபழனி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை