உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மீன்பிடிக்க சென்றவர் நடுக்கடலில் உயிரிழப்பு

மீன்பிடிக்க சென்றவர் நடுக்கடலில் உயிரிழப்பு

திருவொற்றியூர், திருவொற்றியூர், பலகைத் தொட்டி குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 53. இவருக்கு, மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் அதிகாலை, திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, பைபர் படகில் தனியாக மீன்பிடிக்க சென்றுள்ளார். மாலை, வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.இந்நிலையில், நடுக்கடலில் பைபர் படகு மிதந்துக் கொண்டிருப்பதை உறவினர்கள் பார்த்து, திருவொற்றியூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று அதிகாலை மீனவர்கள் உதவியுடன் சென்று பார்த்த போது, பைபர் படகில் உயிரிழந்த நிலையில் ராஜேந்திரன் கிடந்தார். உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிந்த போலீசார், மாரடைப்பால் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ