உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதை மாத்திரை வைத்திருந்தவர் கைது

போதை மாத்திரை வைத்திருந்தவர் கைது

சென்னை, ஜாம்பஜாரில், போதை மாத்திரை வைத்திருந்த வாலிபரை கைது செய்த போலீசார், அவர் அளித்த தகவலின்படி, மூவரை பிடித்து விசாரிக்கின்றனர்.ஜாம்பஜார் போலீசார் நேற்று முன்தினம் இரவு, பாரதி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றவரை பிடித்து விசாரித்தனர். முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால், அவரை சோதனை செய்ததில், 50 போதை மாத்திரைகளை மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. அவரை கைது செய்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், திருவல்லிக்கேணி, பார்டர் தோட்டத்தைச் சேர்ந்த சையது ரபிக் உதின், 23, என தெரிந்தது.அவர் அளித்த தகவலின்படி திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சமீர் உதின், 19, முகமது ஆசித், 21, ேஷக் முகமது இஸ்மாயில், 29, ஆகிய மூவரை பிடித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி