உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குன்றத்துார் அம்மன் கோவில் அருகே வேகத்தடை அமைக்க கோரிக்கை

குன்றத்துார் அம்மன் கோவில் அருகே வேகத்தடை அமைக்க கோரிக்கை

குன்றத்துார், குன்றத்துார்-- - திருமுடிவாக்கம் சாலையை பயன்படுத்தி குன்றத்துார், வழுதலம்பேடு, திருமுடிவாக்கம், திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டை, திருநீர்மலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் இயக்கப்படுகின்றன.இந்த சாலையில், குன்றத்துார் முருகன் கோவில் மலை அடிவாரம் நத்தம் பகுதியில், காத்தயாயனி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலிலுக்கு, ஏராளமான மக்கள் வருகை தருவர்.மேலும், கோவில் அருகே அங்கன்வாடி மையம், குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில், கோவில் அருகே சாலை வளைவு உள்ளது. இந்த வழியே வேகமாக செல்லும் வாகனங்களால், பக்தர்கள், பொதுமக்கள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது.எனவே, இந்த கோவில் அருகே சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை