| ADDED : மே 02, 2024 12:31 AM
பெரம்பூர்,பெரம்பூர், எஸ்.எஸ்.வி.கோவில் தெருவைச் சேர்ந்த பக்தீசன் மகன் செல்வகுமார், 42. இவர், திரு.வி.க.நகர் சுடுகாட்டில், தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார்.மது பழக்கத்திற்கு அடிமையான இவர், 10 ஆண்டுகளாக நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு, அதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். மதுவை விட முடியாமலும், நரம்பு தளர்ச்சியாலும் அவதிப்பட்டு வந்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு, அதீத மது போதையில் இருந்த இவர், பிருந்தா தியேட்டர் அருகே, மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், லுங்கியால் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.அதிகாலை 6:00 மணிக்கு, அவ்வழியே சென்ற பொதுமக்கள், ஆண் சடலம் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த திரு.வி.க.நகர் போலீசார், செல்வகுமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பினர்.இறந்த நபர், அதிகாலை 2:00 மணி முதல் 6:00 மணிக்குள் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் நடந்த பகுதியில் 'சிசிடிவி' காட்சிகள் இல்லாததால், இறந்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது, பிரேத பரிசோதனைக்கு பின் தெரியவரும் என, போலீசார் கூறினர்.