உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பிரின்ஸ் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சாதனை

பிரின்ஸ் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சாதனை

சென்னை, 'பிரின்ஸ்' கல்வி குழுமத்தின், மடிப்பாக்கம் மற்றும் நங்கநல்லுார் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில், 215 மாணவ - மாணவியர், தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.மடிப்பாக்கம் பள்ளியில், மாணவி வி.காயத்ரி, மூன்று பாடங்களில் 100க்கு 100 எடுத்து, 596 மதிப்பெண்களுடன் முதலிடத்தை பிடித்தனர்.எஸ்.டேனிஷ், இரண்டு பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து, 588 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடமும்; எம்.சுஜித், இரண்டு பாடங்களில் சென்டம் எடுத்து, 587 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தை பிடித்து பள்ளி அளவில் சாதனை படைத்தனர்.இப்பள்ளியில் தேர்வு எழுதிய, 139 மாணவர்களும், 100 சதவீத தேர்ச்சி பெற்றனர். அதில், 43 மாணவர்கள் பல்வேறு பாடப் பரிவுகளில் சென்டம் எடுத்தனர்.

நங்கநல்லுார்

நங்கநல்லுார் பள்ளியில், எஸ்.சர்வேஷ், 564 மதிப்பெண்களுடன் முதலிடமும், எ.பி.சானியா மேக்டெலின், 563 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், எஸ்.தருண் 562 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். மூவரும் தலா ஒரு பாடத்தில் சென்டம் எடுத்தனர். இப்பள்ளியில், தேர்வு எழுதிய, 76 மாணவர்களும், 100 சதவீத தேர்ச்சி பெற்று, அதில் 13 மாணவர்கள் பல்வேறு பாடத்தில் சென்டம் எடுத்தனர்.பிரின்ஸ் பள்ளிகளில் தேர்வு எழுதிய, 215 மாணவர்களில், கணித அறிவியல் பாடத்தில், 26 பேரும், வர்த்தகவியலில் 11 பேரும், கணக்கியலில் ஏழு பேரும், கணிதம் ஆறு பேரும், பெருளாதாரத்தில் நான்கு பேரும், இயற்பியல் மற்றும் வணிக கணிதம் பாடங்களில் தலா ஒருவர் என, மொத்தம் 56 மாணவர்கள் சென்டம் பெற்றுள்ளனர்.தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை, பிரின்ஸ் கல்வி குழுமங்களில் தலைவர் வாசுதேவன், துணை தலைவர் விஷ்ணு கார்த்திக், பிரசன்னா வெங்கடேசன், செயலர் ரஞ்சனி மற்றும் தலைமை ஆசிரியர்கள் பாராட்டினர். மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை