| ADDED : ஆக 09, 2024 12:40 AM
சென்னை, சென்னையில், வரும் 26ம் தேதி, விபத்தில்லா தினமாக கடைபிடிக்க, சென்னை போக்குவரத்து காவல் துறை திட்டமிட்டு உள்ளது. இதற்காக 'ஜீரோ இஸ் குட்' என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள், சென்னை முழுதும் வைக்கப்பட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக நேற்று, மாநகராட்சி மற்றும் அரசு பள்ளி மாணவர்கள், 1,000 பேருக்கு ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சியை, எழும்பூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் துவக்கி வைத்தார். இன்று, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.இதேபோல், மயிலாப்பூர் போக்குவரத்து உதவி கமிஷனர் ஜே.சிவகுமார், ராயப்பேட்டை போக்குவரத்து ஆய்வாளர் சபாபதி தலைமையிலான போலீசார், லாயிட்ஸ் சாலையிலுள்ள மாநகராட்சி பள்ளி மாணவர்கள், 20 பேருக்கு, இலவசமாக தலைக்கவசம் வழங்கினர்.தொடர்ந்து, போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதன் அவசியம் மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து, மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.