உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பார்க்கிங் பகுதியான நடைபாதை எழும்பூரில் அ.தி.மு.க.,வினர் அடாவடி

பார்க்கிங் பகுதியான நடைபாதை எழும்பூரில் அ.தி.மு.க.,வினர் அடாவடி

எழும்பூர், எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே உண்ணாவிரதம் இருந்த அ.தி.மு.க., - எம்.எல்.,ஏக்கள் மற்றும் பிரமுகர்கள், நடைபாதையை வாகன நிறுத்தமாக மாற்றியதால், பாதசாரிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.நடப்பு சட்டசபை கூட்டத்தொடர் முழுதும் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி தலைமையில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களும், கட்சி பிரமுகர்களும் ருக்மணி லட்சுமிபதி சாலை நடைபாதையை ஆக்கிரமித்து, தங்களது கார்களை நிறுத்திவிட்டுச் சென்றனர். இதனால், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது:உண்ணாவிரத போராட்டத்திற்கு வருவோரின் வாகனங்களை நிறுத்துவதற்கென, காயிதே மில்லத் கல்லுாரி பின்புறம் உள்ள சாலையை ஒதுக்கியிருந்தோம். போக்குவரத்து பாதிக்காதபடி நடவடிக்கை மேற்கொண்டோம். ஆனால், அ.தி.மு.க.,வினர் இதை கண்டுகொள்ளாமல், நடைபாதையில் கார்களை நிறுத்திவிட்டுச் சென்றனர். இதனால் பாதசாரிகள் தான் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:அண்ணா நகரில் நடைபாதையை வாகன நிறுத்தமாக பயன்படுத்துவோருக்கு, பாரபட்சமின்றி அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இங்கும், நடைபாதையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்ட வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடத்த, தீவுத்திடல் போன்ற இடங்களில் மட்டும் அனுமதி அளிக்க வேண்டும். அப்போதுதான் பொதுமக்களுக்கு பாதிப்பு இருக்காது.இவ்வாறு அவர்கள் கூறினர். நடைபாதையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்ட அ.தி.மு.க., பிரமுகர்களின் விலை உயர்ந்த கார்கள். இடம்: ருக்மணி லட்சுமிபதி சாலை, எழும்பூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூன் 28, 2024 10:01

இப்படி சட்டத்தை, மக்களை மதிக்காத, ஆக்கிரமிப்பு செய்யும் இவனெல்லாம் ஆட்சிக்கு வந்து நமக்கு நல்லது செய்வான் என்று நம்பினால் நீயும் கண்ணிருந்தும் குருடனே.


மேலும் செய்திகள்