உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விமானத்தில் கடத்திய அகர் கட்டை பறிமுதல்

விமானத்தில் கடத்திய அகர் கட்டை பறிமுதல்

சென்னை,இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து, நேற்று முன்தினம் சென்னை வந்த விமானத்தில் பயணியரின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில், இருவரது உடைமைகளில் இருந்து, ஆறு 'பண்டல்'களில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அகர் மரக்கட்டைகள், 10க்கும் மேற்பட்ட பாட்டில்களில், 3 லிட்டர் அகர் எண்ணெய் கடத்தி வந்தது தெரிந்தது.அதன் மதிப்பு, 15 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.நம் நாட்டில் அழிந்து வரும் மரங்களின் பட்டியலில், அகர் மரம் உள்ளது. இறக்குமதிக்கும் அனுமதி இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி