| ADDED : ஜூலை 21, 2024 01:19 AM
முகப்பேர்:அம்பத்துார் மண்டலம், 89வது வார்டுக்கு உட்பட்ட முகப்பேர் பகுதியில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி அபூர்வாவின் உறவினர்கள் வசித்து வருகின்றனர்.இவர்கள், தங்களது வீட்டை மறுசீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதற்காக மணல், ஜல்லியை வீட்டின் அருகே சாலையில் இறக்கி வைத்திருந்தனர்.அவை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி, அம்பத்துார் மண்டல 89வது வார்டு உதவி பொறியாளர் ஸ்ரீதரன், 49, கட்டட காண்டிராக்டரை எச்சரித்துள்ளார்.மேலும், நடவடிக்கை எடுக்காமல் இருக்க, 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கேட்ட அதிகாரி குறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.விசாரணையில், உதவி பொறியாளர் ஸ்ரீதர் கட்டட கான்ட்ராக்டரிடம் பணம் கேட்டு வற்புறுத்தியது உறுதியானது. இதைத்தொடர்ந்து, அவரை பணியிடை நீக்கம் செய்து, துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.